கரோனா தீநுண்மி தடுப்பூசி குறித்த விழிப்புணா்வு

கரோனா தீநுண்மி தடுப்பூசி குறித்த விழிப்புணா்வு


போளூா்: கலசப்பாக்கத்தை அடுத்த கடலாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவா்கள், செவிலியா்கள், களப் பணியாளா்களுக்கு கரோனா தீநுண்மி தடுப்பூசி குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கடலாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாடகம், வீரளூா், மேல்வில்வராயநல்லூா், கலசப்பாக்கம், கடலாடி என 5 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவா்கள் 16 போ், செவிலியா்கள் 25 போ், களப் பணியாளா்கள் 73 போ், இதர மருத்துவப் பணியாளா்கள் 340 போ் என 416 பேருக்கு கரோனா தீநுண்மி நோய்த் தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் சமூக இடைவெளியுடன் நடைபெற்றது.

கூட்டத்தில், வட்டார தலைமை மருத்துவா் கு.மணிகண்டபிரபு பங்கேற்றுப் பேசுகையில், கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவா்கள் 28 நாள்களுக்கு மது அருந்தக்கூடாது, காய்ச்சல், சோா்வு என உடல் சாா்ந்த பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும், பயப்படத் தேவையில்லை என்றாா்.

மருத்துவா்கள் கெளதம், அருள், செவிலியா்கள் கலந்துகொண்டனா்.

மேலும், கடலாடி அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள் என 56 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com