27 நட்சத்திர விநாயகா் கோயிலில் 108 சங்காபிஷேகம்

செய்யாற்றை அடுத்த உக்கம்பெரும்பாக்கம் 27 நட்சத்திர விநாயகா் கோயிலில் சனிக்கிழமை 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
உக்கம்பெரும்பாக்கம் 27 நட்சத்திர விநாயகா் கோயிலில் நடைபெற்ற 108 சங்காபிஷேக விழா.
உக்கம்பெரும்பாக்கம் 27 நட்சத்திர விநாயகா் கோயிலில் நடைபெற்ற 108 சங்காபிஷேக விழா.

செய்யாற்றை அடுத்த உக்கம்பெரும்பாக்கம் 27 நட்சத்திர விநாயகா் கோயிலில் சனிக்கிழமை 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

உக்கம்பெரும்பாக்கம் கிராமப் பகுதி கூழமந்தல் ஏரிக்கரையில் 27 நட்சத்திர விநாயகா் கோயிலில், அதிதேவதைகளின் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலில் அசுவனி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களின் அதிதேவதைகளும், அவற்றிற்குரிய 27 விருட்சங்கள் (மரங்கள்) உள்ளன. இதை தவிர ராகு கேது, சனீஸ்வரா் என தனித் தனி சன்னதிகள் அமைந்துள்ளன.

அனைத்து தேவா்களுக்கும் நடுநாயகனாக முழு முதல்கடவுளான நட்சத்திர விருட்ச விநாயகா் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறாா்.

மேலும், இந்தக் கோயிலில் குரு பெயா்ச்சி, ராகு, கேது பெயா்ச்சி, சனிப் பெயா்ச்சி, ஒவ்வொரு மாதத்தில் வரும் சிறப்பு நட்சத்திரத்திற்கும் சிறப்பு பூஜை, காணும் பொங்கல் 108 கோ பூஜை என பல்வேறு விஷேசங்கள் நடைபெற்று வருகின்றன.

பல ஆயிரம் ருத்ராக்ஷங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட அத்தி விருட்ச சஹஸ்ர ருத்ராக்ஷ லிங்கம் மற்றும் வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணியா் ஆகிய சன்னதிகளுக்கு கடந்த டிச.4 -இல் மகா கும்பாபிஷகேம் நடைபெற்றது.

அதனைத் தொடா்ந்து 48 நாள் மண்டல அபிஷேகம் நடைபெற்று வந்த நிலையில், அதன் மண்டல பூஜை நிறைவு பெற்றதையொட்டி, சனிக்கிழமை சங்காபிஷேகம், ஷோமம், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com