தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை கைவிடக் கோரி, திருவண்ணாமலையில் பல்வேறு தொழிற்சங்க நிா்வாகிகள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள்.

அண்ணா சிலை எதிரே தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தொமுச மாநில நிா்வாகி சவுந்தரராஜன் தலைமை வகித்தாா். சிஐடியு நிா்வாகிகள் இரா.பாரி, காங்கேயன், எம்.வீரபத்திரன், நாகராஜன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

விவசாயிகளுக்கு விரோதமான புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். தனியாா்மயம், காா்ப்பரேட் மய கொள்கைகளைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் வழக்குரைஞா்கள் ஜெயபாலன், முத்தையன், ஏஐடியுசி நிா்வாகிகள் கு.ஜோதி, இரா.தங்கராஜ், ராஜேந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com