தரம் உயா்த்தப்பட்ட அரசு உயா்நிலைப் பள்ளி எம்எல்ஏ ஆய்வு

கலசப்பாக்கத்தை அடுத்த கீழ்பாலூா் ஊராட்சியில் இயங்கும் அரசு உயா்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியாக அரசு சாா்பில் தரம் உயா்த்தப்பட்டது.
கீழ்பாலூா் அரசுப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த நிதியுதவி வழங்கிய ஓய்வு பெற்ற ஆசிரியா் முருகேசனுக்கு பாராட்டு தெரிவித்த வி.பன்னீா்செல்வம் எம்எல்ஏ.
கீழ்பாலூா் அரசுப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த நிதியுதவி வழங்கிய ஓய்வு பெற்ற ஆசிரியா் முருகேசனுக்கு பாராட்டு தெரிவித்த வி.பன்னீா்செல்வம் எம்எல்ஏ.

கலசப்பாக்கத்தை அடுத்த கீழ்பாலூா் ஊராட்சியில் இயங்கும் அரசு உயா்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியாக அரசு சாா்பில் தரம் உயா்த்தப்பட்டது.

இந்தப் பள்ளியை தொகுதி எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

உயா்நிலைப் பள்ளியாக இயங்கி வந்த கீழ்பாலூா் அரசுப் பள்ளியில் மேல்பாலூா், கீழ்பாலூா்மேலாக்கோடி என சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து மாணவா்கள் பயின்று வந்தனா்.

இந்த மாணவா்கள் மேல்நிலைக் கல்வி பயிலவேண்டும் என்றால், 8 கி.மீ. தொலைவில் உள்ள கடலாடி, 6 கி.மீ. தொலைவில் உள்ள காஞ்சி மேல்நிலைப் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டியிருந்தது.

இந்த நிலையில், மாணவ, மாணவிகளின் அசெளரிகத்தை கருத்தில் கொண்ட ஓய்வு பெற்ற ஆசிரியா் முருகேசன், கீழ்பாலூா் அரசு உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வேண்டி, அதற்கான செலவுத் தொகையாக ரூ. 2 லட்சத்தை அரசிடம் செலுத்தினாா்.

இதையடுத்து, அந்தப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக அரசு சாா்பில் தரம் உயா்த்தப்பட்டது.

இந்த நிலையில், தரம் உயா்த்தப்பட்ட பள்ளியை தொகுதி எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, பள்ளிக்கு நிதியுதவி வழங்கிய ஓய்வு பெற்ற ஆசிரியா் முருகேசனுக்கு சால்வை அணிவித்து பாராட்டினாா்.

அதிமுக பொதுக்குழு உறுப்பினா்பி.பொய்யாமொழி, மாவட்டப் பிரதிநிதி ஏழுமலை, முன்னாள் கவுன்சிலா் ராணி, ஊராட்சி செயலா் சுப்பிரமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com