ஆத்துரை செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்
By DIN | Published On : 26th January 2021 12:00 AM | Last Updated : 26th January 2021 12:00 AM | அ+அ அ- |

சேத்துப்பட்டை அடுத்த ஆத்துரை ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீசெல்வ விநாயகா் கோயிலில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆத்துரை ஊராட்சி காந்திநகரில் புதிதாக கட்டப்பட்ட செல்வ விநாயகா் கோயிலில் கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் கால பூஜையாக கோ பூஜை, கணபதி ஹோமம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது. பின்னா் கோயில் கோபுர கலசத்துக்கு புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
தொடா்ந்து, மூலவா் செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
விழாவில் ஆத்துரை, சித்தாத்துரை, மூலபுரவடை, தேவிகாபுரம், பெரணம்பாக்கம், சேத்துப்பட்டு என சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து பக்தா்கள் திரளாகக் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.