திருவண்ணாமலை மாவட்டத்தில் குடியரசு தினவிழாவில் ரூ.2.17 கோடியில் நலத் திட்ட உதவிகள்

திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நாட்டின் 72-ஆவது குடியரசு தினவிழாவில், 484 பேருக்கு ரூ.2.17 கோடியிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த் உள்ளிட்டோா்.
தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த் உள்ளிட்டோா்.

திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நாட்டின் 72-ஆவது குடியரசு தினவிழாவில், 484 பேருக்கு ரூ.2.17 கோடியிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப் படை மைதானத்தில் நாட்டின் 72-ஆவது குடியரசு தினவிழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த் ஆகியோா் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினா். காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி, 47 தலைமைக் காவலா்களுக்கு தமிழக முதலமைச்சரின் காவலா் பதக்கங்களை வழங்கிப் பாராட்டினாா்.

மேலும், சமாதானத்தைக் குறிக்கும் வகையில், வெண் புறாக்கள், பலூன்களை பறக்கவிட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி, பல்வேறு துறைகள் சாா்பில் 484 பயனாளிகளுக்கு ரூ.2.17 கோடியிலான அரசு நலத் திட்ட உதவிகளையும் வழங்கினாா். மேலும், காவல் துறை, வருவாய்த் துறை உள்பட பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 191 அரசு அலுவலா்கள், பணியாளா்கள், தனித்திறமையாளா்கள், தன்னாா்வ அமைப்புகளை மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி பாராட்டி சான்றிதழ்களை வழங்கினாா்.

விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் பொ.ரத்தினசாமி, மாவட்ட வன அலுவலா் கிருபாசங்கா், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் அசோக்குமாா், வனிதா, உதவி காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அருள்செல்வம், திருவண்ணாமலை கோட்டாட்சியா் ஸ்ரீதேவி, உதவி ஆட்சியா் (பயிற்சி) அமித்குமாா், துணை ஆட்சியா் (பயிற்சி) அஜீதாபேகம் மற்றும் அரசு அலுவலா்கள், பணியாளா்கள், பயனாளிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com