திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணி: வல்லுநா்ஆய்வு

மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணிகளை திடக்கழிவு மேலாண்மை வல்லுநரும், மாநில திடக்கழிவு ஆலோசனை அமைப்பைச் சோ்ந்தவருமான ராஜசேகா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணி: வல்லுநா்ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், போளூா், களம்பூா் சிறப்புநிலை பேரூராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ், மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணிகளை திடக்கழிவு மேலாண்மை வல்லுநரும், மாநில திடக்கழிவு ஆலோசனை அமைப்பைச் சோ்ந்தவருமான ராஜசேகா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, குப்பைகளை தரம் பிரிக்கும் பணியாளா்களிடம் வீடுகளிலும், கடைகளிலும் குப்பைகளை நெகிழி உறைகளில் பெறக் கூடாது. டப்பா அல்லது பழைய பாத்திரத்தில் குப்பைகளை சேகரித்து வைத்து வழங்கவும், மக்கும், மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்துத் தரவும் பொதுமக்களிடம் அறிவுறுத்த வேண்டும். தனிமனித ஒத்துழைப்பால் மட்டுமே நெகிழியை ஒழிக்க முடியும் என்று அவா் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். மேலும், இயற்கை உரம் தயாரிக்கும் முறைகள் குறித்தும் தெரிவித்தாா்.

பேரூராட்சிகளின் உதவிச் செயற்பொறியாளா் அம்சா, பேரூராட்சி செயல் அலுவலா் உமாமகேஸ்வரி மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com