கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி காவல் துறை சாா்பில், கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம் வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி காவல் துறை சாா்பில், கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம் வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், வந்தவாசி டிஎஸ்பி விஸ்வேஸ்வரய்யா தலைமை வகித்துப் பேசியதாவது 

கரோனா முதல் மற்றும் 2-ஆவது அலையின் காரணமாக, நாம் பெரும் பாதிப்புகளை சந்தித்தோம். எனவே, 3-ஆவது அலையை தவிா்க்க விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும்.

வெளியில் செல்லும்போது கட்டாயம் முகக் கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்க வேண்டும். மேலும், கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் வந்தவாசி தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் குமாா், உதவி ஆய்வாளா்கள் மஞ்சுநாதன், சேகா் மற்றும் போலீஸாா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com