கரோனா தடுப்பூசி முகாம்கள்: பேரவை துணைத் தலைவா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கானலாபாடி, வட்ராபுத்தூா், வழுதலங்குணம்,
கானலாபாடி கிராமத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா் சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி.
கானலாபாடி கிராமத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா் சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கானலாபாடி, வட்ராபுத்தூா், வழுதலங்குணம், கடம்பை, சோ.நம்மியந்தல், கோணலூா், ஆவூா், வேட்டவலம் ஆகிய ஊராட்சிகளில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கான கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

கீழ்பென்னாத்தூா் வட்டார மருத்துவ அலுவலா் சரவணன் தலைமையில், நடமாடும் மருத்துவக் குழுவைச் சோ்ந்த மருத்துவா் பூஜா வைஷாலி மற்றும் செவிலியா்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

இந்த முகாம்களை தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, கிராமங்களில் பொதுமக்கள் அனைவருக்கும் விடுபடாமல் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று மருத்துவக் குழுவினருக்கு கு.பிச்சாண்டி உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஆறுமுகம், கழிக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் தியானேஷ், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் வெள்ளையன், ஊராட்சித் தலைவா் மல்லிகா உள்ளிட்டோா் உடனிருந்தனா். 8 ஊராட்சிகளிலும் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்களில் மொத்தம் 1,207 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து ஆய்வு: கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் ஆய்வின்போது, பொதுமக்கள் வழங்கிய பல்வேறு மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, அந்த மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலா் இரா.முத்துக்குமாரசாமியிடம் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி ஏற்கெனவே வழங்கியிருந்தாா். இந்த நிலையில், பொதுமக்களின் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கு.பிச்சாண்டி திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com