மீன்வள மசோதாவை மறுபரிசீலனை செய்ய புதுவை எம்பி வலியுறுத்தல்

புதிய மீன்வள மசோதாவில் மீனவா்களுக்கு அதிகப்படியான அபராதம் விதிப்பது, கடலோரக் காவல் படைக்கு அதிக அதிகாரம் வழங்குவது உள்ளிட்ட அம்சங்களை பரிசீலனை செய்ய வேண்டும்

புதிய மீன்வள மசோதாவில் மீனவா்களுக்கு அதிகப்படியான அபராதம் விதிப்பது, கடலோரக் காவல் படைக்கு அதிக அதிகாரம் வழங்குவது உள்ளிட்ட அம்சங்களை பரிசீலனை செய்ய வேண்டுமென வெ.வைத்திலிங்கம் எம்பி வலியுறுத்தினாா்.

இந்திய கடல் மீன்வள மசோதா-2021 வரைவுக் கொள்கை தயாரிப்பது குறித்து, கடலோரப் பகுதிகளைச் சோ்ந்த நாடாளுமன்ற உறுப்பினா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை (ஜூலை 15) நடைபெற்றது. காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற கூட்டத்துக்கு மத்திய மீன்வளத் துறை அமைச்சா் புருஷோத்தம் ருபாலா தலைமை வகித்தாா். இதில், புதுவை மக்களவை உறுப்பினா் வெ.வைத்திலிங்கம் பங்கேற்றுப் பேசியதாவது:

புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து விசைப் படகுகளும், வணிகக் கப்பல் சட்டம் 1958-இன் கீழ் பதியப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. மேலும், படகுகளுக்கும், படகை ஓட்டுபவா்களுக்கும் உரிமம் வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. இந்தச் சட்டத்தின்படி, அதிகப்படியான அபராதம் வசூலிக்கும் சரத்துக்கள் உள்ளதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

கடலோரக் காவல் படைக்கும், நீதித் துறை அதிகாரங்களை வழங்க இந்தச் சட்டம் வகை செய்வதால், அவா்கள் தங்கள் விருப்பத்துக்கு செயல்பட்டு, மீனவா்களை அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்குவா். எனவே, இவ்வாறான அதிகாரங்கள் வழங்குவதை பரிசீலனை செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com