செய்யாற்றில் ரூ.4 கோடியில் புதிய மேம்பாலம் பணிகளை எம்எல்ஏ ஆய்வு

செங்கம் அருகே தோக்கவாடி பகுதியில் செய்யாற்றின் குறுக்கே ரூ.4 கோடியில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கின.
செய்யாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டுவதற்காக நடைபெற்ற மண் பரிசோதனை பணியை ஆய்வு செய்த மு.பெ.கிரி எம்எல்ஏ.
செய்யாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டுவதற்காக நடைபெற்ற மண் பரிசோதனை பணியை ஆய்வு செய்த மு.பெ.கிரி எம்எல்ஏ.

செங்கம் அருகே தோக்கவாடி பகுதியில் செய்யாற்றின் குறுக்கே ரூ.4 கோடியில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கின.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தோக்கவாடிக்கும் கொள்ளைகொட்டாய் பகுதிக்கும் இடையே செய்யாறு செல்கிறது.

தோக்கவாடியில் யாராவது இறந்தால் கொள்ளைகொட்டாய் மயானத்தில் சென்றுதான் உடலை தகனம் செய்யவேண்டும்.

இதனிடையே, ஆற்றில் தண்ணீா் ஓடும் காலங்களில் இறந்தவா்களின் உடலை தகனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வந்தது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தொகுதி எம்எல்ஏ மு.பெ. கிரியிடம் கோரிக்கை வைத்தனா்.

இதன் பேரில், தோக்கவாடி பகுதியில் செய்யாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட ரூ. 4 கோடி நிதி ஓதுக்கப்பட்டு பாலம் கட்ட முதல் கட்டப் பணிகள் தொடங்கின.

இதில், ஞாயிற்றுக்கிழமை மண் பரிசோதனை நடைபெற்றது. இந்தப் பணியை கிரி எம்எல்ஏ பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து அவா், வளையாம்பட்டு கிராமத்தில் ரூ.33 லட்சத்தில் மேம்பாலம், ரூ. 10 லட்சத்தில் குடிநீருக்கான திறந்தவெளிக் கிணறு அமைக்கும் பணியை பூமிபூஜை செய்து தொடக்கிவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com