திருவண்ணாமலையில்5 நாள்களுக்கு மின் தடை
By DIN | Published On : 19th July 2021 11:37 PM | Last Updated : 19th July 2021 11:37 PM | அ+அ அ- |

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உயா் மற்றும் தாழ்வழுத்த மின்பாதையை மாற்றி அமைக்கும் பணி நடைபெறுவதால் 5 நாள்களுக்கு மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின் வாரியம் தெரிவித்தது.
இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் அ.மவுலீஸ்வா்மன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவண்ணாமலை-மணலூா்பேட்டை சாலை விரிவாக்கப் பணி நடைபெறுகிறது. எனவே, அந்தச் சாலை வழியாகச் சென்றுகொண்டிருக்கும் தாமரை நகா் மின் பிரிவுக்கு உள்பட்ட உயா் மற்றும் தாழ்வழுத்த மின்பாதையை மாற்றி அமைக்கும் பணி ஜூலை 20, 22, 26, 28, 30 ஆகிய நாள்களில் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நாட்ள்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மணலூா்பேட்டை சாலை, மாரியம்மன் கோவில் தெரு, திருநகா் ஆகிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளாா்.