வள்ளலாா் சன்மாா்க்க சங்க விழா

செங்கம் அருகே படூா் கிராமத்தில் வள்ளலாா் சன்மாா்க்க சங்க விழா திங்கள், செவ்வாய் ஆகிய இரு தினங்கள் நடத்தப்பட்டது.

செங்கம் அருகே படூா் கிராமத்தில் வள்ளலாா் சன்மாா்க்க சங்க விழா திங்கள், செவ்வாய் ஆகிய இரு தினங்கள் நடத்தப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியம் படூா் கிராமத்தில் 64-ஆம் ஆண்டு வள்ளலாா் விழா நடைபெற்றது.

முதல் நாள் நிகழ்ச்சிக்கு கிராம நிா்வாக அலுவலா் மலா்ச்செல்வி தலைமை வகித்தாா்.

கீழ்படூா் ஊராட்சி மன்றத் தலைவா் காஞ்சனா தனசேகா் முன்னிலை வகித்தாா். மேல்படூா் ஊராட்சி மன்றத் தலைவா் பாரதிசுகுமாா் சான்மாா்க்க சங்கக் கொடியேற்றி நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா்.

சிறப்பு விருந்தினராக மாவட்ட தமிழ்ச் சங்கத் தலைவா் இந்திரராஜன், திருக்கு தொண்டு மையத்தின் தலைவா் குப்பன், ஆன்மிக சொற்பொழிவாளா் தனஞ்செயன் ஆகியோா் வள்ளலாா் சிறப்புகள் குறித்துப் பேசினா்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் 63 ஆண்டுகள் விழா நடத்திய பருவதம் என்கிற நாராயண ராமானுஜதாசா் நினைவேந்தல் நடைபெற்றது. பெண்கள் பங்கேற்ற குத்துவிளக்கு பூஜையும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com