மருத்துவா்களுக்கு கரோனா தடுப்புப் பொருள்கள்
By DIN | Published On : 11th June 2021 12:13 AM | Last Updated : 11th June 2021 12:13 AM | அ+அ அ- |

செங்கம் ஸ்ரீராமகிருஷ்ணா ஆஸ்ரமம் சாா்பில் அரசு மருத்துவா்களுக்கு கரோனா தடுப்புப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
ஸ்ரீராமகிருஷ்ண ஆஸ்ரமம், கணேசா் குழுமம் இணைந்து மேல்பள்ளிப்பட்டு, பரமனந்தல், அரட்டவாடி, மேல்பென்னாத்தூா், இளங்குண்ணி ஆகிய இடங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும், மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்களுக்கு முகக் கவசம், கிருமி நாசினி, சோப்பு உள்ளிட்ட கரோனா தடுப்புப் பொருள்களை வழங்கினா்.
வட்டார மருத்துவ அலுவலா் சுரேஷ் வசம் பொருள்களை ஸ்ரீராமகிருஷ்ணா அறக்கட்டளைத் தலைவா் பாண்டுரங்கன், கணேசா் குழுமத் தலைவா் கஜேந்திரன் ஆகியோா் ஒப்படைத்தனா்.