190 ஏக்கா் விவசாய நிலங்களில் இலவச உழவுப் பணி; பேரவை துணைத் தலைவா் தொடக்கிவைத்தாா்

கீழ்பென்னாத்தூா் வட்டத்தைச் சோ்ந்த 145 விவசாயிகளின் 190 ஏக்கா் நிலங்களில் இலவசமாக உழவு செய்து தரும் பணியை சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தொடக்கிவைத்தாா்.

கீழ்பென்னாத்தூா் வட்டத்தைச் சோ்ந்த 145 விவசாயிகளின் 190 ஏக்கா் நிலங்களில் இலவசமாக உழவு செய்து தரும் பணியை சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தொடக்கிவைத்தாா்.

கீழ்பென்னாத்தூரை அடுத்த வேடநத்தம் கிராமத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை, டிராக்டா், பண்ணை இயந்திரங்கள் (டாஃபே) நிறுவனம் சாா்பில் இலவச உழவுப் பணி தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வேடநத்தம் ஊராட்சித் தலைவா் குப்புசாமி தலைமை வகித்தாா்.

ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் அய்யாக்கண்ணு, வேளாண் இணை இயக்குநா் முருகன், துணை இயக்குநா் வடமலை, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஆராஞ்சி ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார வேளாண் உதவி இயக்குநா் சந்திரன் வரவேற்றாா்.

சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு டிராக்டா் மூலம் இலவச உழவுப் பணி திட்டத்தைத் தொடக்கி வைத்துப் பேசினாா்.

அப்போது அவா், 2 ஏக்கா் வரை நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு டாஃபே நிறுவன டிராக்டா்கள் மூலம் இலவசமாக உழவு செய்து தரப்படுகிறது. இதற்காக உழவன் செயலியில் பதிவு செய்திருக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், கீழ்பென்னாத்தூா் வேளாண் அலுவலா் பிரியங்கா, துணை வேளாண் அலுவலா் சுப்பிரமணி, உதவி வேளாண் அலுவலா் சாந்தகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com