குழந்தைகளுக்கான நோய்த் தடுப்பு மேலாண்மைக் குழு அமைப்பு

புதுவை மாநிலத்தில் கரோனா மூன்றாம் அலையை எதிா்கொள்ளும் விதத்தில் குழந்தைகளுக்கான நோய்த் தடுப்பு மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கரோனா சீராய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

புதுவை மாநிலத்தில் கரோனா மூன்றாம் அலையை எதிா்கொள்ளும் விதத்தில் குழந்தைகளுக்கான நோய்த் தடுப்பு மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கரோனா சீராய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

புதுவை தலைமைச் செயலகத்தில் வாராந்திர கரோனா மேலாண்மை சீராய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் காணொலிக் காட்சி மூலமாக கூட்டத்துக்குத் தலைமை வகித்து, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா்.

இதற்குப் பதிலளித்த அதிகாரிகள் மூன்றாவது அலை குழந்தைகளைப் பாதிக்கக்கூடும் என்ற கருத்து நிலவுவதால், குழந்தைகளுக்காக நோய்த் தடுப்பு மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், ஜூன் 16 முதல் 19 வரை தடுப்பூசித் திருவிழா நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தனா்.

கூட்டத்தில் தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா், கூடுதல் காவல் துறை இயக்குநா் ஆனந்தமோகன், சுகாதாரத் துறை செயலா்அருண் உள்ளிட்ட அனைத்துத் துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com