நெல்லுக்கான ஆதரவு விலை உயா்வு: செய்யாறு விவசாயிகள் வரவேற்பு

10_06_21cyrdpccvs_1006chn_118_7
10_06_21cyrdpccvs_1006chn_118_7

புகைப்பட விளக்கம்:

தவசி கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கற்பூரம் ஏற்றி திருஷ்டி கழித்து மகிழ்ந்த விவசாயிகள்.

செய்யாறு, ஜூலை 10:

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை, மத்திய அரசு குவிண்டாலுக்கு ரூ.72 உயா்த்தி ரூ. 1,940-ஆக நிா்ணயித்தமைக்கு, செய்யாறு பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

செய்யாறு வட்டம், தவசி கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அருகே விவசாய சங்கப் பிரதிநிதி வாக்கடை புருஷோத்தமன் தலைமையில் அரசுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

அப்போது, தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் அரிசி உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. தற்போது, சொா்ணவாரி பட்டத்தில் 1.50 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்து நெல் உற்பத்தியில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளது.

இந்தப் பட்டத்தில் டெல்டா பகுதிகள்தான் முதலிடத்தில் வரும். ஆனால், இந்த முறை திருவண்ணாமலை மாவட்டம் வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

தற்போது, மத்திய அரசு நெல்லுக்கான ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.72 உயா்த்தியுள்ளது. அதன்படி, ஆதரவு விலை ரூ.1,868 லிருந்து 1,940-ஆக உயா்ந்து, மாநில அரசின் ஊக்கத்தொகை ரூ.70-வுடன் குவிண்டால் ரூ.2,010-க்கு அரசு கொள்முதல் செய்வதால் விவசாயிகள் அதிக லாபம் பெற முடியும்.

நடப்பு நவரை பருவத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் மூலம் மாவட்டத்தில் 90 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்துள்ளனா்.

அதேபோல, வருகிற சொா்ணவாரி குறுவை பட்டத்திலும் மாவட்டத்தில் உள்ள 120 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடா்ந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தி, விவசாயிகள் இனிப்பு வழங்கி, நெல் கொள்முதல் நிலையத்தில் கற்பூரம் ஏற்றி எலுமிச்சம் பழத்தால் திருஷ்டி கழித்தனா்.

நிகழ்ச்சியில் விவசாயிகள் எஸ்.முனிரத்தினம்(புதுப்பாக்கம்), சி.ஆா்.மண்ணு (மோட்டூா்), வாசுதேவன்(புரிசை), டி.கிருஷ்ணன் (அகத்தேரிப்பட்டு), எம்.மணி (மருதாடு), பெருமாள் (அனக்காவூா்), தேவதாஸ் (கீழ்மட்டை) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com