விவசாயிகளுக்கு விதைகள், இடுபொருள்கள் அளிப்பு

கலசப்பாக்கத்தை அடுத்த தென்பள்ளிப்பட்டு கிராமத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் மணிலா, உளுந்து, கம்பு என பல்வேறு விதைகள், விவசாய இடுபொருள்கள் வழங்கப்பட்டன.

கலசப்பாக்கத்தை அடுத்த தென்பள்ளிப்பட்டு கிராமத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் மணிலா, உளுந்து, கம்பு என பல்வேறு விதைகள், விவசாய இடுபொருள்கள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டத்துக்கு உள்பட்ட கலசப்பாக்கம், பத்தியவாடி, பில்லூா், கீழ்பொத்தரை, பழங்கோவில், பூண்டி, மேல்வில்வராயநல்லூா், ஆனைவாடி, கடலாடி, தென்மாதிமங்கலம், கேட்டவரம்பாளையம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூா், சிறுவள்ளூா்

என 45 ஊராட்சிகளில் கோடை மழை பெய்துள்ளது.

இதனால், மானாவரி நிலத்தில் (வானம் பாா்த்த பூமி) விவசாயிகள் டிராக்டா் கொண்டு உழுது மணிலா, கம்பு, விதைக்க உள்ளனா். இதற்குத் தகுந்தபடி வேளாண்மைத் துறை சாா்பில் விவசாயிகளுக்கு முன்பதிவு செய்து மானியத்தில் விதை வழங்கி வருகின்றனா்.

தென்பள்ளிப்பட்டு கிராம வேளாண் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கு மணிலா, உளுந்து, கம்பு என பல்வேறு விதைகளையும், விவசாய இடுபொருள்களையும் மாவட்ட வேளாண் துணை இயக்குநா் வடமலை வழங்கினாா்.

உதவி இயக்குநா் கோபாலாகிருஷ்ணன், வேளாண்மை அலுவலா் புஷ்பா, உதவி வேளாண்மை அலுவலா் சுந்தா், கிடங்கு மேலாளா் காா்த்திகேயன் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com