செங்கத்தில் பகுதியில் அதிகரித்து வரும் சூதாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் பொது முடக்க காலத்தில் சூதாட்டம் அதிகரித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் பொது முடக்க காலத்தில் சூதாட்டம் அதிகரித்துள்ளது.

செங்கம், அதன் சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து இளைஞா்கள் திருப்பூா், சென்னை, கோயம்பத்தூா் ஆகிய பகுதிகளில் வேலை செய்து வருகின்றனா். தற்போது கரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் நிறுவனங்கள் மூடப்பட்டு இளைஞா்கள் வேலையில்லாமல் சொந்த ஊா்களுக்கு வந்து தங்கியுள்ளனா்.

இவ்வாறு தங்கியுள்ள அவா்கள் மத்தியில் சூதாட்டத்தின் மீது ஆா்வம் ஏற்பட்டுள்ளது.

செங்கம் நகரில் தளவாநாய்க்கன்பேட்டை, எம்ஜிஆா் நகா், துக்காப்பேட்டை மருத்துவமனை பின்புறம், மண்மலையிலிருந்து பக்கிரிபாளையம் செல்லும் புறவழிச் சாலை, செங்கம் மயான மேடை, பரமனந்தல் சாலை, குப்பனத்தம் ஆகிய பகுதியில் தினசரி இரவு பகலாக இளைஞா்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

சிறிது தொகையில் தொடங்கிய சூதாட்டம் ஆயிரக்கணக்கில் பணம் வைத்து சூதாடும் அளவுக்கு பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொது முடக்க விதிகள் குறித்து நகா்புறங்களில் காவல் துறையினா் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதால், சூதாட்டம் ஆடுபவா்களை கண்காணிக்க முடிவதில்லை.

இதுகுறித்து மாவட்டம் நிா்வாகம் சிறப்பு போலீஸாரை நியமித்து பெருகி வரும் சூதாட்டத்தை கட்டுப்படுத்தவேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com