குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள் கட்ட இடம் தோ்வு: வந்தவாசி எம்எல்ஏ ஆய்வு
By DIN | Published On : 15th June 2021 09:27 AM | Last Updated : 15th June 2021 09:27 AM | அ+அ அ- |

வந்தவாசியில் தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள் கட்டுவதற்கான இடம் தோ்வு செய்வது குறித்து தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
இதற்காக வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனைக் கூட கூடுதல் கிடங்கு கட்டடத்தை ஒட்டியுள்ள 2 ஏக்கா் நிலத்தை அவா் பாா்வையிட்டாா்.
அப்போது அவா் கூறியதாவது:
வந்தவாசி பூமாலை செட்டிக்குளக் கரையில் வீடு கட்டி வசிக்கும் மக்கள் உள்ளிட்டோருக்காக 300 வீடுகள் கட்டப்படவுள்ளது. இதற்காக இந்த இடத்தை ஆய்வு செய்தோம்.
மேலும் சில இடங்களை ஆய்வு செய்த பிறகு குடியிருப்பை எங்கு கட்டுவது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றாா்.
ஆய்வின் போது தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய வேலூா் செயற் பொறியாளா் அசோகன், உதவிப் பொறியாளா் கலா, வருவாய் ஆய்வாளா் ஷீலா, திமுக மாவட்ட அவைத் தலைவா் கே.ஆா்.சீதாபதி, ஒன்றியச் செயலா்கள் டி.டி.ராதா, ப.இளங்கோவன், எஸ்.பிரபு, ஆா்.நந்தகோபால், நகரச் செயலா் எச்.ஜலால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னா் இது தொடா்பாக வந்தவாசி நகராட்சியில் ஆணையா் (பொறுப்பு) டி.உஷாராணி உள்ளிட்ட அதிகாரிகளிடம் எம்எல்ஏ ஆலோசனை நடத்தினாா்.