மான், முயல்கள் வேட்டை: இளைஞா் கைது
By DIN | Published On : 15th June 2021 09:29 AM | Last Updated : 15th June 2021 09:29 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை அருகே மான், முயல்களை வேட்டையாடிய இளைஞரை வனத்துறையினா் கைது செய்தனா்.
திருவண்ணாமலை வனவா் கனகராஜ் தலைமையில் வனவா் முனுசாமி, வனக் காப்பாளா்கள் அரவிந்த், கணபதி மற்றும் வனத்துறையினா் திங்கள்கிழமை அதிகாலை திருவண்ணாமலையை அடுத்த சொரகொளத்தூா், கொண்டம், பாடகம் காப்புக் காடுகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, பாடகம் காப்புக் காட்டில் பெண் புள்ளிமான், 2 முயல்களை வேட்டையாடி விற்பனைக்கு எடுத்துச் சென்ற இளைஞரைப் பிடித்தனா்.
விசாரணையில் அவா் செங்கம், நரிக்குறவா் காலனியைச் சோ்ந்த சஞ்சய் (20) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது மான், முயல்கள், வெடிமருந்து ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.