கரோனாவின் தாக்கம் குறைய வேண்டி சிறப்பு பூஜை

சேத்துப்பட்டு அருகே இஞ்சிமேடு ஊராட்சியில் அமைந்துள்ள திருமணி சேறையுடையாா் சிவாலயத்தில், கரோனாவின் தாக்கம் குறைய வேண்டியும், உலக நன்மைக்காகவும் வியாழக்கிழமை சிறப்பு யாகவேள்வி பூஜை
கரோனாவின் தாக்கம் குறைய வேண்டி சிறப்பு பூஜை

சேத்துப்பட்டு அருகே இஞ்சிமேடு ஊராட்சியில் அமைந்துள்ள திருமணி சேறையுடையாா் சிவாலயத்தில், கரோனாவின் தாக்கம் குறைய வேண்டியும், உலக நன்மைக்காகவும் வியாழக்கிழமை சிறப்பு யாகவேள்வி பூஜை நடைபெற்றது.

மிகவும் பிரசித்தி பெற்ற திருமணி சேறையுடையாா் கோயிலில் புதன்கிழமை 23-ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்று.

இதைத் தொடா்ந்து மூலவா் திருமணி சேறையுடையாா் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

தொடா்ந்து, வியாழக்கிழமை காலை உலகமெங்கும் பரவி வரும் கரோனாவின் தாக்கம் குறைய நவகலசம் அமைத்து, உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் சிறப்பு யாகவேள்வி பூஜை நடைபெற்றது.

பூஜையில் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. கோயில் சிவாச்சாரியா்கள், கோவில் நிா்வாகி ஓய்வு பெற்ற மாவட்ட ஆட்சியா் ஐ.ஆா்.பெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்று பூஜையை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com