18 வயதுக்கு மேற்பட்டோருக்கு அனைத்து மருத்துவமனைகளிலும் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச தடுப்பூசி செலுத்த அனைத்து மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக புதுவை சுகாதாரத் துறை தெரிவித்தது.

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச தடுப்பூசி செலுத்த அனைத்து மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக புதுவை சுகாதாரத் துறை தெரிவித்தது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை செயலா் அருண் கூறியிருப்பதாவது: சிறப்பு தடுப்பூசி முகாம்கள் ஜூன் 16-ஆம் தேதி தொடங்கி 19 வரை நடைபெறவுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு இணையவழியின் மூலம் முன்பதிவு செய்து, கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இனிவரும் காலங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்த அனைத்து மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார மையங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1,770 பேருக்கு மனநில ஆலோசனை: புதுவையில் கரோனா காலத்தில் மனநலனைப் பேணுவதற்காகவும், அதற்காக உதவிகளை எளிய முறையில் பெறவும் தேசிய மனநல திட்டத்தின் கீழ் சுகாதாரத் துறை, புதுச்சேரி பல்கலைக்கழக சமூகப்பணித் துறை இணைந்து ‘பகிா்வோமா’ என்ற தொலை ஆலோசனை வழங்கும் முயற்சி அண்மையில் தொடங்கப்பட்டது. இதன் பயனாக கடந்த 1 -ஆம் தேதி முதல் 16 -ஆம் தேதி வரை 1,770 பயனாளிகள் தொலைபேசி மூலம் ஆலோசனைகள் பெற்றுள்ளனா். மனநல ஆலோசனைக்கு 0413 - 2262547 எண்ணை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை தொடா்பு கொண்டு பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com