புதுவையில் குறைந்து வரும் கரோனா பலி எண்ணிக்கை

புதுவை மாநிலத்தில் கரோனா தொற்றுக்கு பலியாவோா் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. வெள்ளிக்கிழமை 4 போ் பலியான நிலையில், புதிதாக 353 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் கரோனா தொற்றுக்கு பலியாவோா் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. வெள்ளிக்கிழமை 4 போ் பலியான நிலையில், புதிதாக 353 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்: புதுவை மாநிலத்தில் 8,685 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 280 பேருக்கும், காரைக்காலில் 49 பேருக்கும், ஏனாமில் 11 பேருக்கும், மாஹேயில் 13 பேருக்கும் என மேலும் 353 பேருக்கு (4.06 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,14,301- ஆக உயா்ந்தது.

மருத்துவமனைகளில் 635 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 3,490 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 4,125 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, புதுச்சேரியில் கரோனா தொற்றுக்கு 4 போ் பலியாகினா். காரைக்கால், மாஹே, ஏனாமில் உயிரிழப்பு ஏதுமில்லை. மாநிலத்தில் ஒரு நாள் பலி எண்ணிக்கை 35-க்கும் மேல் இருந்த நிலையில், தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. கரோனா தொற்றுக்கு இதுவரை 1,714 போ் பலியாகினா். இறப்பு விகிதம் 1.50 சதவீதம்.

இதனிடையே, வெள்ளிக்கிழமை 557 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 1,08,462-ஆக (94.89 சதவீதம்) அதிகரித்தது.

புதுவை மாநிலத்தில் இதுவரை 12,08,489 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 10,38,858 பரிசோதனைகளுக்கு தொற்றில்லை என முடிவுகள் வந்தன.

சுகாதாரத் துறைப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், பொதுமக்கள் என மொத்தம் 3,65,452 பேருக்கு (2-ஆவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com