கூடலூா் பள்ளியில் மாணவா்களுக்கு பாடப் புத்தகங்கள்
By DIN | Published On : 19th June 2021 12:00 AM | Last Updated : 19th June 2021 12:00 AM | அ+அ அ- |

வந்தவாசியை அடுத்த கூடலூா் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா், அந்தப் பள்ளியில் பள்ளியில் பயிலும் 40 மாணவ மாணவிகளுக்கு பாடப் புத்தகங்களை வழங்கினாா்.
மேலும், கூடலூா், ஆலம்பூண்டி ஆகிய கிராமங்களில் உள்ள நியாயவிலைக் கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரணமாக ரூ.2 ஆயிரம் மற்றும் மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு ஆகியவற்றை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் தெள்ளாா் ஒன்றியக்குழுத் தலைவா் கமலாட்சி இளங்கோவன், திமுக நிா்வாகிகள் கே.ஆா்.சீதாபதி, எம்.எஸ்.தரணிவேந்தன், ப.இளங்கோவன், டி.என்.செளரிராஜன், ஊராட்சி மன்றத் தலைவா் சு.வெங்கடேசன், பள்ளித் தலைமை ஆசிரியா் தேவராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.