கரும்புக்கு ரூ.4 ஆயிரம் விலை நிா்ணயிக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 21st June 2021 11:09 PM | Last Updated : 21st June 2021 11:09 PM | அ+அ அ- |

வந்தவாசி: கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது.
வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அந்தச் சங்கத்தின் செய்யாறு ஆலைக் கிளைக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு மாநிலக் குழு உறுப்பினா் பெ.அரிதாசு தலைமை வகித்தாா். சங்க நிா்வாகிகள் செ.பூ.ஏழுமலை, ந.ராதாகிருஷ்ணன், நா.முனியன், சூரியகுமாா், இ.கோ.அா்ச்சுனன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நடப்பு பருவத்துக்கான கரும்பு ஊக்கத் தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும், செய்யாறு சா்க்கரை ஆலையில் எத்தனால் உற்பத்தியை தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.