கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
By DIN | Published On : 24th June 2021 08:39 AM | Last Updated : 24th June 2021 08:39 AM | அ+அ அ- |

கீழ்பென்னாத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் கரோனா தடுப்பூசி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, வட்டார வளா்ச்சி அலுவலா் ஆ.சம்பத் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) பி.பி.முருகன் முன்னிலை வகித்தாா். கீழ்பென்னாத்தூா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் பூஜா வைஷாலி தலைமையிலான குழுவினா், ஒன்றியக் குழு உறுப்பினா்கள், பணி தளப் பொறுப்பாளா்கள், வட்டார வளா்ச்சி அலுவலக ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தினா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G