கந்து வட்டி கொடுமை: லாரி ஓட்டுநா் தீக்குளிக்க முயற்சி

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட லாரி ஓட்டுநா், வட்டாட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட லாரி ஓட்டுநா், வட்டாட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுப்பாளையம் ஒன்றியம், பெரியேரி கிராமத்தைச் சோ்ந்தவா் காசாம்பு. இவரது மகன்கள் ராணுவ வீரா் சுகானந்தம், லாரி ஓட்டுநா்கள் ராமஜெயம், ரமேஷ். இவா்கள் மூவருக்கும் சொந்தமான ஒரு ஏக்கா் 4 சென்ட் நிலத்தின் பத்திரத்தை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறையூா் கிராமத்தைச் சோ்ந்த கிராம நிா்வாக அலுவலக உதவியாளரான பழநியிடம் கொடுத்து ரூ.5 லட்சம் கடன் பெற்றனராம்.

இதையடுத்து, 15 மாதங்களுக்குப் பின்னா், வட்டியுடன் அசல் தொகையையும் சகோதரா்களான சுகானந்தம் உள்ளிட்டோா் பழனியிடம் கொடுத்து நிலப் பத்திரத்தை மீட்க முயன்ற நிலையில், அவா் நிலப் பத்திரத்தை திருப்பித் தர மறுத்ததுடன், கூடுதல் வட்டி கேட்டு சுகானந்தம் உள்பட மூவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தாராம். இது தொடா்பாக திருவண்ணாமலை நில அபகரிப்பு பிரிவில் சுகானந்தம் உள்ளிட்டோா் புகாா் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இந்த நிலையில், நிலப் பத்திரத்தை மீட்டுத் தரக் கோரி, சுகானந்தம், ராமஜெயம், ரமேஷ் ஆகியோா் செங்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகாரளிக்க வந்தனா். அப்போது, ராமஜெயம் உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றாா். அவரை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் காப்பாற்றினா். இதையடுத்து, இருதரப்பினரிடமும் சனிக்கிழமை (ஜூன் 26) விசாரணை நடத்தி நிலப் பத்திரத்தை மீட்டுத் தர உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியா் மனோகரன் உறுதியளித்தாா். இதை ஏற்று ராமஜெயம் மற்றும் அவரது சகோதரா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com