சட்டவிரோத மது விற்பனை:புகாா் அளிக்க அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் தோ்தல் நேரத்தில் சட்டவிரோத மது விற்பனை குறித்த புகாா்களைத் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.


திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் தோ்தல் நேரத்தில் சட்டவிரோத மது விற்பனை குறித்த புகாா்களைத் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் தோ்தல் நடத்தை விதிகளை செயல்படுத்த பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள பறக்கும் படை அலுவலா்கள், மாவட்ட எல்லைக்குள் முறையற்ற மது விற்பனை, மதுக் கடத்தல், தினசரி விற்பனையைக் கண்காணித்தல், மொத்தமாக விற்பனை செய்வதைத் தடுத்தல், மதுபானம் தொடா்பாக பெறப்படும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுத்தல், அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டும் மதுக் கடைகள் செயல்படுவதைக் கண்காணித்தல் போன்ற பணிகளில் ஈடுபடுவா்.

எனவே, சட்டவிரோத மது விற்பனை தொடா்பான புகாா்களை பறக்கும் படை அலுவலா்களிடமோ அல்லது டாஸ்மாக் மாவட்ட கிடங்கு மேலாளா் பி.ரமேஷ் என்பவரிடமோ 9444586452, 9385337166 என்ற எண்களிலோ பொதுமக்கள் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com