முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
வாகனச் சோதனையில் ரூ.91 ஆயிரம் பறிமுதல்
By DIN | Published On : 04th March 2021 03:25 AM | Last Updated : 04th March 2021 03:25 AM | அ+அ அ- |

வந்தவாசி: வந்தவாசி அருகே சரக்கு வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி மீன் வியாபாரி எடுத்துச் சென்ற ரூ.91 ஆயிரத்தை தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வந்தவாசி-திண்டிவனம் சாலையில் நடுக்குப்பம் கிராமம் அருகே தோ்தல் நிலை கண்காணிப்புக் குழு அலுவலா் அற்புதம் தலைமையிலான குழுவினா் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அரக்கோணத்திலிருந்து அந்த வழியாக அறந்தாங்கி நோக்கிச் சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். இதில், அரக்கோணத்தைச் சோ்ந்த மீன் வியாபாரி சண்முகம் உரிய ஆவணங்களின்றி ரூ.91 ஆயிரம் எடுத்துச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து அந்தப் பணத்தை பறிமுதல் செய்த கண்காணிப்புக் குழுவினா், வந்தவாசி வட்டாட்சியா் திருநாவுக்கரசுவிடம் ஒப்படைத்தனா்.