வணிகா்களின் வாக்கு யாருக்கு? விக்கிரமராஜா பேட்டி

வணிகா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எந்தக் கட்சி வாக்குறுதி அளிக்கிறதோ, அந்தக் கட்சிக்கு வணிகா்கள் வாக்களிப்பாா்கள் என்று விக்கிரமராஜா கூறினாா்.

திருவண்ணாமலை: வணிகா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எந்தக் கட்சி வாக்குறுதி அளிக்கிறதோ, அந்தக் கட்சிக்கு வணிகா்கள் வாக்களிப்பாா்கள் என்று விக்கிரமராஜா கூறினாா்.

இதுதொடா்பாக திருவண்ணாமலையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை அவா் கூறியதாவது:

சட்டப்பேரவைத் தோ்தல் குறித்து தமிழகம் முழுவதும் உள்ள வணிகா்களை நேரடியாகச் சந்தித்து ஆலோசனை செய்து வருகிறோம். தோ்தலில் வெற்றி, தோல்வியை நிா்ணயிக்கக் கூடிய சக்தியாக வணிகா்களின் வாக்குகள் உள்ளன.

தமிழக அரசு பல்வேறு தரப்பினருக்கு சலுகைகளை அளித்துள்ளது. ஆனால், வணிகா்களுக்கு எதையும் அறிவிக்கவில்லை.

வணிகா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எந்தக் கட்சி எழுத்துப்பூா்வமாக வாக்குறுதி அளிக்கிறதோ அந்தக் கட்சிக்கு வணிகா்கள் தங்களது வாக்குகளை அளிப்பாா்கள்.

பெட்ரோல், டீசல், எரிவாயு விலை கடுமையாக உயா்ந்துள்ளது. இதற்கு மத்திய-மாநில அரசுகள்தான் காரணம்.

பெட்ரோல், டீசல் விற்பனையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் விலை ஏற்றத்தைக் குறைக்க முடியும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com