முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
உலக நன்மை வேண்டி யாக வேள்வி பூஜை
By DIN | Published On : 04th March 2021 03:25 AM | Last Updated : 04th March 2021 03:25 AM | அ+அ அ- |

போளூா்: சேத்துப்பட்டை அடுத்த இஞ்சிமேடு ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில், சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு உலக நன்மை வேண்டி புதன்கிழமை யாகவேள்வி பூஜை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே இஞ்சிமேடு ஊராட்சியில் மிகவும் பழைமை வாய்ந்த ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் அமைந்துல்ளது.
இந்தக் கோயிலில் மாதம்தோறும் வரும் சுவாதி நட்சத்திரம் அன்று உலக நன்மை வேண்டியும், திருமணத் தடை, கடன் தொல்லை நீங்க வேண்டியும் யாக வேள்வி பூஜை நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி, புதன்கிழமை சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று, பூக்களால் அலங்காரம் செய்து யாகவேள்வி நடத்தப்பட்டது.
இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். மேலும் பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.