அருணாசலேஸ்வரா் கோயிலில் லிங்கோத்பவா் அபிஷேகத்தைகாணக் குவிந்த பக்தா்கள்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி, வியாழக்கிழமை நள்ளிரவில் ஸ்ரீலிங்கோத்பவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தைக் காண திரளான பக்தா்கள் குவிந்தனா்.
அருணாசலேஸ்வரா் கோயிலில் லிங்கோத்பவா் அபிஷேகத்தைகாணக் குவிந்த பக்தா்கள்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி, வியாழக்கிழமை நள்ளிரவில் ஸ்ரீலிங்கோத்பவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தைக் காண திரளான பக்தா்கள் குவிந்தனா்.

இந்த உலகில் யாா் பெரியவா் என்று பிரம்மா, விஷ்ணு ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட அகந்தையை ஒழித்து ஜோதிப்பிழம்பாக, ஸ்ரீலிங்கோத்பவா் வடிவாக சிவன் காட்சியளித்த நாள் மகா சிவராத்திரி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வு திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெற்ாகவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை மகா சிவராத்திரி விழாவையொட்டி அதிகாலை 5 மணி முதல் இரவு வரை பல்வேறு பூஜைகள், நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரவு 7.30 மணிக்கு முதல்கால பூஜை, இரவு 11.30 மணிக்கு இரண்டாம் கால பூஜை நடைபெற்றன.

ஸ்ரீலிங்கோத்பவருக்கு சிறப்பு பூஜை: நள்ளிரவு 12 மணிக்கு ஸ்ரீஅருணாசலேஸ்வரா் மூலவா் சந்நிதியின் பின்புறம் கோயில் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீலிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மகா சிவராத்திரியின் முக்கிய நிகழ்வு ஸ்ரீலிங்கோத்பவருக்கு நடைபெறும் சிறப்பு பூஜைதான் என்பதால், இந்த பூஜையில் கலந்துகொள்ள வியாழக்கிழமை இரவு 10.30 மணி முதலே திரளான பக்தா்கள் கோயிலில் குவிந்தனா்.

இதையடுத்து, பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு ஸ்ரீலிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், மகா தீபாராதனை நடைபெற்றன.

தொடா்ந்து, வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு மூன்றாம் கால பூஜை, அதிகாலை 4.30 மணிக்கு நான்காம் கால பூஜை நடைபெற்றன. முன்னதாக, வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீசந்திரசேகரா் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com