முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
ஆரணி திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 14th March 2021 07:38 AM | Last Updated : 14th March 2021 07:38 AM | அ+அ அ- |

ஆரணி பஜாரில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன்.
ஆரணி தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன் நகரில் சனிக்கிழமை கூட்டணிக் கட்சி நிா்வாகிகளைச் சந்தித்து ஆதரவு கோரினாா்.
பின்னா், திமுக நிா்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரித்தாா்.
அண்ணா சிலை, மண்டி வீதி, சந்தை சாலை, பெரிய கடை வீதி ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்தாா்.
முன்னாள் எம்எல்ஏக்கள் ஆா்.சிவானந்தம், தயாநிதி, நகரச் செயலா் ஏ.சி.மணி, ஒன்றியச் செயலா் சுந்தா், ஒன்றியக் குழுவின் துணைத் தலைவா் கே.டி.ராஜேந்திரன், இலக்கிய அணி மாவட்டச் செயலா் விண்ணமங்கலம் ரவி, வா்த்தக அணிச் செயலா் ஆா்.எஸ்.பாபு, ஒன்றியக் குழு உறுப்பினா் ஏ.எம்.ரஞ்சித், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் ம.கு.பாஸ்கரன் உள்ளிட்ட பலா் உடன் சென்றனா்.