தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு சசிகலாவை மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்துவேன் என்று அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் கூறினாா்.
திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. நான் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட திங்கள்கிழமை (மாா்ச் 15) வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளேன். இந்தத் தோ்தலில் அமமுகவுக்கான வெற்றி பிரகாசமாக உள்ளது.
தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் வரையில்தான் அதிமுக இருக்கும். அதன் பிறகு கட்சி சிதறிவிடும். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டா்கள் அமமுக பக்கம் இருப்பதால் அதிமுகவை கண்டிப்பாக மீட்போம். அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக சசிகலா தெரிவித்துள்ளது அவரது விருப்பம்.
தோ்தலுக்குப் பிறகு சசிகலாவை மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்துவேன் என்றாா்.