அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன் சொத்து விவரம்

ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் தான் மற்றும் தனது குடும்பத்தினரின் சொத்து விவரம் குறித்து தெரிவித்துள்ளாா்.

ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் தான் மற்றும் தனது குடும்பத்தினரின் சொத்து விவரம் குறித்து தெரிவித்துள்ளாா்.

அசையும் சொத்து:

சேவூா் எஸ்.ராமச்சந்திரன் தனது பெயரில் வங்கி வைப்பீடுகள், சேமிப்புக் கணக்குத் தொகை, இரு சக்கர வாகனங்கள், காா் என ரூ.40 லட்சத்து 67ஆயிரத்து 288 அசையும் சொத்தாக உள்ளது என்றும், தனது மனைவி மணிமேகலை பெயரில் உள்ள அசையும் சொத்தின் மதிப்பு ரூ.2 கோடியே 12 லட்சத்து 41ஆயிரத்து 672 என்றும் குறிப்பிட்டுள்ளாா்.

இதுதவிர, முதல் மகன் பெயரில் உள்ள அசையும் சொத்தின் மதிப்பு ரூ.1 கோடியே 57 லட்சத்து 20 ஆயிரத்து 845 என்றும், 2-ஆவது மகன் பெயரில் ரூ. 4 லட்சத்து 31ஆயிரத்து 799, முதல் மருமகள் பெயரில் ரூ. 2 கோடியே 74 லட்சத்து 83 ஆயிரத்து 263, 2-ஆவது மருமகள் பெயரில் ரூ.53 லட்சத்து 72 ஆயிரத்து 639 என்றும் வேட்புமனுவில் தெரிவித்துள்ளாா்.

அசையா சொத்து:

சேவூா் ராமச்சந்திரன் தனது பெயரில் உள்ள அசையா சொத்தின் மதிப்பு ரூ.18 லட்சத்து 25 ஆயிரம், மனைவி பெயரில் உள்ள அசையா சொத்தின் மதிப்பு ரூ.3 கோடியே 48 லட்சத்து 89ஆயிரத்து 899 என்றும் குறிப்பிட்டுள்ளாா்.

முதல் மகன் பெயரில் ரூ.45 லட்சத்து 50ஆயிரம் , 2-ஆவது மகன் பெயரில் ரூ. ஒரு கோடியே 40 லட்சம், முதல் மருமகள் பெயரில் ரூ.80 லட்சம், 2-ஆவது மருமகள் பெயரில் ரூ. 52 லட்சத்து 83ஆயிரத்து 239 என அசையா சொத்துகள் உள்ளது என்று மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

வங்கிக் கடன்கள்:

சேவூா் ராமச்சந்திரன் தனது பெயரில் எந்தக் கடனும் இல்லையென்றும், மனைவி பெயரில் வங்கியில் ரூ. 26 லட்சத்து 55 ஆயிரத்து 100, முதல் மகன் பெயரில் ரூ. 95 லட்சத்து 84 ஆயிரத்து 498, 2-ஆவது மகன் பெயரில் ரூ. 45 லட்சத்து 93 ஆயிரத்து 914 கடன் உள்ளது என்றும் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com