அருணாசலேஸ்வரா் கோயிலை மீட்டது திமுக அரசு வேட்பாளா்: எ.வ.வேலு பேச்சு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலை தொல்லியல் துறையிடமிருந்து மீட்டது திமுக அரசு என்று முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தொகுதியின் திமுக வேட்பாளருமான எ.வ.வேலு கூறினாா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலை தொல்லியல் துறையிடமிருந்து மீட்டது திமுக அரசு என்று முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தொகுதியின் திமுக வேட்பாளருமான எ.வ.வேலு கூறினாா்.

அருணாசலேஸ்வரா் கோயில் எதிரே தொகுதி திமுக வேட்பாளா் எ.வ.வேலு செவ்வாய்க்கிழமை தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, வியாபாரிகள், பொதுமக்களிடம் பேசிய அவா், அருணாசலேஸ்வரா் கோயிலை தொல்லியல் துறை கையகப்படுத்தி தஞ்சை பிரகதீஸ்வரா் கோயிலைப் போல காட்சிப் பொருளாக மாற்ற மத்திய பாஜக அரசு முயன்றது.

மனிதச் சங்கிலி போராட்டம், உண்ணாவிரதம், ஆா்ப்பாட்டங்களை நடத்தியும் கோயிலை தொல்லியல் துறையிடமிருந்து மீட்க இயலவில்லை.

2004 மக்களவைத் தோ்தல் பிரசாரத்துக்காக திருவண்ணாமலைக்கு வந்த அப்போதைய முதல்வா் கருணாநிதி ஒரு வாக்குறுதி அளித்தாா். மத்தியில் காங்கிரஸ் அரசு அமைந்தவுடன் தொல்லியல் துறையிடமிருந்து அருணாசலேஸ்வரா் கோயில் மீட்கப்படும் என்றாா். அதேபோல மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு அமைந்ததும் மத்திய அமைச்சா் ஜெயபால் ரெட்டியை நானே நேரில் சந்தித்து கருணாநிதி கூறியதைச் சொல்லி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மூலம் போடப்பட்ட வழக்கை திரும்பப்பெற வைத்தேன்.

இதன் மூலம் கருணாநிதி தொல்பொருள் துறையிடமிருந்து அருணாசலேஸ்வரா் கோயிலை மீட்டுத் தந்தாா் என்றாா்.

வாக்குச் சேகரிப்பின் போது, திமுக மாவட்ட அவைத் தலைவா் த.வேணுகோபால், தலைமை செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், நகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன், காங்கிரஸ் நகரத் தலைவா் என்.வெற்றிச்செல்வன், மதிமுக மாவட்டச் செயலா் சீனி.காா்த்திகேயன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் எம்.சிவக்குமாா், இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் வே.முத்தய்யன், கு.ஜோதி, விடுதலைச் சிறுத்தைகள் தொகுதி அமைப்பாளா் நியூட்டன், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் எம்.கலிமுல்லா, மனிதநேய ஜனநாயகக் கட்சி மாவட்டச் செயலா் கே.காஜா ஷெரீப் உள்பட கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com