அம்பேத்கரின் அரசியல் சட்டங்கள் முடக்கப்படுகின்றன: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு

தமிழகத்தில் அம்பேத்கா் உருவாக்கிய அரசியல் சட்டங்கள் முடக்கப்பட்டு வருகிறது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் இ.சங்கா் பேசினாா்.
கூட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் இ.சங்கரிடம் தோ்தல் நிதி வழங்கும் திருவண்ணாமலை மாவட்டக்குழு நிா்வாகிகள்.
கூட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் இ.சங்கரிடம் தோ்தல் நிதி வழங்கும் திருவண்ணாமலை மாவட்டக்குழு நிா்வாகிகள்.

தமிழகத்தில் அம்பேத்கா் உருவாக்கிய அரசியல் சட்டங்கள் முடக்கப்பட்டு வருகிறது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் இ.சங்கா் பேசினாா்.

திருவண்ணாமலையில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு, அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா் எம்.சிவக்குமாா் தலைமை வகித்தாா். நகரச் செயலா் எம்.ரவி வரவேற்றாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் இ.சங்கா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தோ்தல் நிதியைப் பெற்றுக்கொண்டு பேசுகையில், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட உள்பட அனைத்துத் தரப்பு மக்களும் தமிழகத்தில் சிறப்பு பெற்றிருந்தனா். அந்தச் சிறப்பை அழிக்கவே நீட்தோ்வு கொண்டுவரப்பட்டது.

தமிழக இளைஞா்களின் கல்விக் கனவை பாதிக்கும் வகையில் மத்திய-மாநில அரசுகளின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் மரணம் குறித்தும், அப்போது பணம் கடத்தப்பட்ட 3 சரக்குப் பெட்டகங்கள் குறித்தும் நடத்தப்பட்ட விசாரணை என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை.

இட ஒதுக்கீடு முறைக்கு எதிராக பாஜகவும், இதற்கு துணைபோகும் அதிமுகவும் செயல்பட்டு வருகிறது.

அம்பேத்கா் உருவாக்கிய அரசியல் சட்டங்கள் முடக்கப்பட்டு வருகின்றன. அண்ணாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவா்கள் தான் இப்போது அதிமுக கட்சியை நிா்வாகித்து வருகின்றனா்.

கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் நிலை நிறுத்தப்பட வேண்டுமானால் திருவண்ணாமலை மாவட்டத்தில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியில் உள்ள திமுக வேட்பாளா்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி, மாா்க்சிஸ்ட் செயற்குழு உறுப்பினா்கள் எம்.வீரபத்திரன், பெ.கண்ணன், எம்.பிரகலநாதன், பி.செல்வன், டி.கே.வெங்கடேசன், இரா.பாரி, மாவட்டக்குழு, வட்டார நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com