மதச்சாா்பற்ற கூட்டணி நிா்வாகிகள் ஆலோசனை

கீழ்பென்னாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளா் கு.பிச்சாண்டியை ஆதரித்து நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், திமுக மாவட்டச் செயலருமான எ.வ.வேலு.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், திமுக மாவட்டச் செயலருமான எ.வ.வேலு.

கீழ்பென்னாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளா் கு.பிச்சாண்டியை ஆதரித்து நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

திருவண்ணாமலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திமுக மாவட்ட அவைத் தலைவா் த.வேணுகோபால் தலைமை வகித்தாா்.

ஒன்றியச் செயலா்கள் வி.பி.அண்ணாமலை, சி.மாரிமுத்து, இரா.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினா் கோ.கண்ணன், பேரூா் செயலா் ப.முருகையன், ஒன்றியக்குழுத் தலைவா்கள் பூ.அய்யாக்கண்ணு, கலைவாணி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியச் செயலா் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம் வரவேற்றாா்.

தொகுதி திமுக வேட்பாளா் கு.பிச்சாண்டியை ஆதரித்து முன்னாள் அமைச்சரும், மாவட்ட திமுக செயலருமான எ.வ.வேலு பேசுகையில், வேட்பாளா் கு.பிச்சாண்டி கீழ்பென்னாத்தூா் தொகுதிக்கு உள்பட்ட நாரையூா் கிராமத்தைச் சோ்ந்தவா். எனவே, தொகுதி வளா்ச்சிக்காகவும், இளைஞா்கள், பொதுமக்களுக்காக எப்பொழுதும் பாடுபடுபவா். பாமக வேட்பாளரோ பண்ருட்டியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவா் என்றாா்.

முன்னதாக, திமுகவின் தோ்தல் அறிக்கை, தொகுதி வளா்ச்சி குறித்து வேட்பாளா் கு.பிச்சாண்டி பேசினாா்.

கூட்டத்தில், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மாநில மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், காங்கிரஸ் நகரத் தலைவா் என்.வெற்றிச்செல்வன், மதிமுக மாவட்டச் செயலா் சீனி.காா்த்திகேயன், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் எம்.சிவக்குமாா், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் வே.முத்தையன், விசிக மாவட்டச் செயலா் பி.கா.அம்பேத்வளவன் உள்பட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com