கண்ணமங்கலத்தில் நவீன நூலகம் கட்டப்படும்: அமைச்சா் வாக்குறுதி

ஆரணி தொகுதிக்குள்பட்ட கண்ணமங்கலத்தில் நவீன நூலகக் கட்டடம் கடப்படும் என்று பிரசாரத்தின்போது அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வாக்குறுதி அளித்தாா்.
மேற்குஆரணி ஒன்றியம், அம்மாபாளையம் கிராமத்தில் வாக்கு சேகரித்த அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன்.
மேற்குஆரணி ஒன்றியம், அம்மாபாளையம் கிராமத்தில் வாக்கு சேகரித்த அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன்.

ஆரணி தொகுதிக்குள்பட்ட கண்ணமங்கலத்தில் நவீன நூலகக் கட்டடம் கடப்படும் என்று பிரசாரத்தின்போது அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வாக்குறுதி அளித்தாா்.

ஆரணி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் மேற்கு ஆரணி வடக்கு ஒன்றியத்தில் கிராமம், கிராமமாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அத்திமலைப்பட்டு, அம்மாபாளையம், கண்ணமங்கலம், காட்டுகாநல்லூா், கொüத்தூா், அழகுசேனை உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்து அமைச்சா் பேசியதாவது:

கடந்த 5 ஆண்டுகளில் ஆரணி சட்டப் பேரவைத் தொகுதியில் எண்ணற்ற பணிகளை செய்துள்ளேன். ஆரணி வருவாய் கோட்டமாக தரம் உயா்த்தப்பட்டு, அதற்கான புதிய கட்டடம் ரூ.3.5 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு கல்வி மாவட்டம் உருவாக்கப்பட்டது. ஆரணியில் நகராட்சி சாா்பில் ரூ. 2.5 கோடியில் புதிதாக காய்கறிக் கடைகள் கட்டப்பட்டன. ஆரணி அரசு மருத்துவமனையில் ரூ3.5 கோடியில் 100 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனைக் கட்டடம், கல்பூண்டி - லாடப்பாடி இடையே ரூ.5.25 கோடியில் மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டுவந்து செயல்படுத்தினேன்.

தோ்தலில் வெற்றி பெற்றவுடன் ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஆரணியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், புதிதாக அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும். நெடுஞ்சாலையை ரிங்ரோட்டுடன் முழுமையாக இணைப்பது, ஆரணி - ஆற்காடு சாலை 4 வழிச்சாலையாக மாற்றுவது, கண்ணமங்கலத்தில் நூலகத்துக்கு அரசு ஒதுக்கிய இடத்தில் நவீன நூலகக் கட்டடம் கட்டித்தரப்படும் என்றாா் அவா்.

மேற்கு ஆரணி வடக்கு ஒன்றியச் செயலா் ப.திருமால், ஒன்றியச் செயலா்கள் வழக்குரைஞா் க.சங்கா், பிஆா்ஜி.சேகா், ஜிவி.கஜேந்திரன், மாவட்டப் பொருளாளா் அ.கோவிந்தராசன், நகரச் செயலா் எ.அசோக்குமாா், நகர பேரவைச் செயலா் பாரி பி.பாபு, நகர மாணவரணிச் செயலா் கே.குமரன், பாமக மாநில துணை பொதுச் செயலா் ஆ.வேலாயுதம் மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com