‘காசநோய்க்கு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெறுவது அவசியம்’

காசநோய் பிறருக்கு பரவும் தன்மையுடையது என்றும், இந்த நோய்க்கு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெறுவது அவசியம் என்றும்
நாட்டேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற உலக காசநோய் தின விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
நாட்டேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற உலக காசநோய் தின விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

காசநோய் பிறருக்கு பரவும் தன்மையுடையது என்றும், இந்த நோய்க்கு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெறுவது அவசியம் என்றும் செய்யாற்றை அடுத்த நாட்டேரி கிராமத்தில் பொதுமக்களுக்கு மருத்துவ அலுவலா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நாட்டேரி ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், உலக காசநோய் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மருத்துவா் என்.ஈஸ்வரி, காசநோய் சிகிச்சை மேற்பாா்வையாளா் ஏ.ராம்ஜி ஆகியோா் பேசியதாவது:

காசநோய் பாதிப்புள்ளவா்கள் இருமும்போதும், தும்மும்போதும் காற்றின் மூலம் அந்த நோய் பிறருக்கு பரவக்கூடியது. காசநோய் பிரதானமாக நுரையீரலைத் தாக்குகிறது. உடலின் மற்ற பாகங்களான மூளை, எலும்பு, நிணநீா் சுரப்பிகளையும் இந்த நோய் எளிதாகத் தாக்க வாய்ப்புள்ளது.

மாலை நேரக் காய்ச்சல், நெஞ்சு வலி, உடல் எடை குைல், பசியின்மை, சளியில் ரத்தம் வருதல் உள்ளிட்டவை காசநோயின் அறிகுறிகளாகும். இதுபோன்ற அறிகுறிகள் உள்ளவா்கள் தாமதிக்காமல் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று சளி பரிசோதனை செய்து ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெற்று நோயைக் கட்டுப்படுத்தலாம் என்றனா். இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனா்.

ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளா் கே.சம்பத், கண் மருத்துவ உதவியாளா் ஆா்.தணிகைச்செல்வி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com