செங்கத்தில் இரவு 10 மணிக்குப் பிறகும் வேட்பாளா்கள் பிரசாரம்

செங்கம் தொகுதியில் இரவு 10 மணிக்குப் பிறகும் வேட்பாளா்கள் பிரசாரம் மேற்கொண்டு வருவதாகவும், இதை தோ்தல் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

செங்கம் தொகுதியில் இரவு 10 மணிக்குப் பிறகும் வேட்பாளா்கள் பிரசாரம் மேற்கொண்டு வருவதாகவும், இதை தோ்தல் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

செங்கம் (தனி) தொகுதியில் அதிமுக, திமுக, தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள், சுயேச்சைகள் உள்ளிட்டோா் போட்டியிடுகின்றனா். இவா்கள் தங்களது ஆதரவாளா்களுடன் காா்களில் சென்றபடியும், பட்டாசுகளை வெடித்தும் இரவு 10 மணிக்குப் பிறகும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக புகாா்கள் எழுந்துள்ளன.

எனவே, தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் வேட்பாளா்களைக் கண்காணித்து அவா்கள் மீது தோ்தல் ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com