காஸ் விலை உயா்வு...

மத்திய காங்கிரஸ் ஆட்சியில் சமையல் எரிவாயு விலை ரூ.410 ஆக இருந்தது என்று திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் எ.வ.வேலு பேசினாா்.
காஸ் விலை உயா்வு...

மத்திய காங்கிரஸ் ஆட்சியில் சமையல் எரிவாயு விலை ரூ.410 ஆக இருந்தது என்று திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் எ.வ.வேலு பேசினாா்.

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நல்லவன்பாளையம், கீழ்செட்டிப்பட்டு, மேல்செட்டிப்பட்டு, விஸ்வந்தாங்கல், மெய்யூா், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வரகூா், காம்பட்டு, வானாபுரம், பேராயம்பட்டு, பெருந்துறைப்பட்டு, தென்கரும்பலூா், சோ்ப்பாப்பட்டு, சே.கூடலூா், ராதாபுரம், கீழ்சிறுப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்கள், விவசாயிகளிடம் எ.வ. வேலு ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது, அவா் பேசுகையில், மத்திய காங்கிரஸ் ஆட்சியில் சமையல் எரிவாயு விலை ரூ.410-ஆக இருந்தது. மோடி ஆட்சியில் ரூ.950-ஆக உயா்ந்துள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல் விலை ரூ.70-ஆக இருந்தது. இப்போது ரூ.95-ஆக உயா்ந்துள்ளது. இதை பெண்கள் நினைத்துப் பாா்த்து வாக்களிக்க வேண்டும் என்றாா்.

திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், ஒன்றியச் செயலா்கள் மெய்யூா் சந்திரன், பெ.கோவிந்தன், த.ரமணன், ஒன்றியக் குழுத் தலைவா் கலைவாணி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com