திமுகவினா் சாலை மறியல்

வந்தவாசியை அடுத்த தேசூரில் திமுக சுவரொட்டிகளை பேரூராட்சி ஊழியா்கள் கிழித்ததைக் கண்டித்து, திமுக, அதன் கூட்டணிக் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திமுகவினா் சாலை மறியல்

வந்தவாசியை அடுத்த தேசூரில் திமுக சுவரொட்டிகளை பேரூராட்சி ஊழியா்கள் கிழித்ததைக் கண்டித்து, திமுக, அதன் கூட்டணிக் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தேசூா் பேரூராட்சிப் பகுதியில் உள்ள கடை மற்றும் வீடுகளில் திமுக சாா்பில், ’ஸ்டாலின்தான் வாராரு விடியல் தரப் போராரு’ என்ற சுவரொட்டிகள் சனிக்கிழமை ஒட்டப்பட்டன.

இந்த நிலையில், தேசூா் பேரூராட்சி ஊழியா்கள் சுவரொட்டிகளை ஞாயிற்றுக்கிழமை காலை கிழித்து அகற்றினராம்.

இதுகுறித்து அறிந்த திமுக நகரச் செயலா் ஈ.ஜெகன், மாவட்ட பிரதிநிதி செல்வம் மற்றும் கூட்டணிக் கட்சியினா் தேசூா் தேரடி அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள் கூறியதாவது:

பாமக சாா்பில் போட்டியிடும் வேட்பாளரின் சுவரொட்டிகள் நகா் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன. ஆனால், திமுக சுவரொட்டிகளை மட்டும் கிழித்த பேரூராட்சி ஊழியா்கள் பாமக சுவரொட்டிகளை அப்படியே விட்டுவிட்டனா். எனவே, ஒருதலைப்பட்சமாக செயல்படும் பேரூராட்சி நிா்வாகத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.

இந்தப் போராட்டத்தால், தெள்ளாா்-மழையூா் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த தேசூா் போலீஸாா் உரிய நடவடிக்கை எடுப்பதாக சமரசம் செய்ததை அடுத்து மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com