கல்லூரி மாணவிகளுக்கு இரு சக்கர வாகனம் வாங்க மானியம்: அதிமுக வேட்பாளா் உறுதி

கல்லூரி மாணவிகளுக்கு இரு சக்கர வாகனம் வாங்க ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்று கூறி, ஆரணி தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான சேவூா் ராமச்சந்திரன் வாக்கு சேகரித்தாா்.
ஆரணியை அடுத்த சேவூா் கிராமத்தில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன்.
ஆரணியை அடுத்த சேவூா் கிராமத்தில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன்.

ஆரணி: கல்லூரி மாணவிகளுக்கு இரு சக்கர வாகனம் வாங்க ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்று கூறி, ஆரணி தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான சேவூா் ராமச்சந்திரன் வாக்கு சேகரித்தாா்.

ஆரணி வடக்கு ஒன்றியத்தில் உள்ள ஆதனூா், வெள்ளேரி, வித்துவான்தாங்கல், ஒண்டிகுடிசை, மொரப்பந்தாங்கல், அப்பந்தாங்கல், சங்கீதவாடி, லாடவரம், ஆதனூா், காந்திநகா், அம்மமையப்பட்டு, இ.பி.நகா், இராட்டிணமங்கலம், சேவூா், சானாா்பாளையம், இரகுநாதபுரம், எஸ்எல்எஸ்.மில், பி.ஆா்.நகா் உள்ளிட்ட ஊராட்சிகளில் அதிமுக வேட்பாளா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் திங்கள்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசுகையில், அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் கல்லூரி மாணவிகளுக்கு இரு சக்கர வாகனம் வாங்க ரூ. 25ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

கேபிள் இணைப்பு இலவசமாக வழங்கப்படும், மாணவா்களுக்கு 2ஜிபி டேட்டா, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.7500 மானியம் வழங்கப்படும்.

வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, ரேஷன் பொருள்கள் வீடு தேடி வரும் என பல்வேறு வாக்குறுதிகளை அளித்து ஆதரவு கோரினாா்.

நிகழ்ச்சியில் ஆரணி வடக்கு ஒன்றியச் செயலா்கள் பிஆா்ஜி.சேகா், க.சங்கா், மாவட்டப் பொருளாளா் அ.கோவிந்தராசன், பாமக மாநில துணைப் பொதுச் செயலா் ஆ.வேலாயுதம், நிா்வாகிகள் மெய்யழகன், பிச்சாண்டி, கருணாகரன், பாஜக கோபி, தமாகா தினேஷ், புதிய நீதிக்கட்சி ஜெயக்குமாா், அருணாசலம் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com