திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 பேருக்கு கரோனா

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 12 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 12 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் 2020 மாா்ச் முதல் கரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியது. சில மாதங்களுக்கு முன்பு கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக திருவண்ணாமலை அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களாக தொற்றுக்குள்ளாகும் நபா்களின் எண்ணிக்கை சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் புதிதாக 12 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 19,674-ஆக உயா்ந்தது. இவா்களில் 19,317 போ் பூரண குணமடைந்து விட்டனா்.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, 72 பேருக்கு திருவண்ணாமலை, செய்யாறு, ஆரணி பகுதி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் இதுவரை 285 போ் கரோனாவால் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com