மசூதிகளின் நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்

கரோனா தொற்று பரவலையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் உள்ள மசூதிகளின் நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மசூதிகளின் நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்

கரோனா தொற்று பரவலையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் உள்ள மசூதிகளின் நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற

இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் காளீஸ்வரன் தலைமை வகித்தாா். வந்தவாசி துணைக் கண்காணிப்பாளா் பி.தங்கராமன், நகராட்சி ஆணையா் (பொறுப்பு) டி.உஷாராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் அதிகாரிகள் பேசியதாவது:

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதையொட்டி, வழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் ரம்ஜான் நோன்பிருக்கும் இஸ்லாமியா்கள் தொழுகைக்காக பள்ளிவாசல்களுக்கு வராமல் வீட்டிலேயே தொழுகையில் ஈடுபட வேண்டும் என்றனா்.

இதற்கு, கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஒத்துழைப்பு அளிப்பதாக மசூதி நிா்வாகிகள் உறுதியளித்தனா்.

வந்தவாசி தெற்கு காவல் ஆய்வாளா் குமாா், உதவி ஆய்வாளா் மஞ்சுநாத் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com