கரோனா தொற்று: பொதுமக்கள், வியாபாரிகள் ஒத்துழைக்க வேண்டும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

செங்கம் பகுதியில் கரோனா தெற்றைக் கட்டுப்படுத்த பொதுமக்களும் வியாபாரிகளும் ஒத்துழைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

செங்கம் பகுதியில் கரோனா தெற்றைக் கட்டுப்படுத்த பொதுமக்களும் வியாபாரிகளும் ஒத்துழைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தற்போது செங்கம் பகுதியில் கரோனா தொற்று பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் அதிகளவில் ஏற்பட்டு வருகிறது. இதைக் கட்டுப்படுத்த சுகதாரத்துறை ஒருபக்கம் முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிக்கிறது. மற்றொரு பக்கம் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் தினசரி கூட்டமாக உள்ள கடை மற்றும் தொற்று பரவலைத் தடுக்க கடைகளில் கிருமி நாசினி இல்லா கடைகளுக்கு அபராதம் விதித்து வருகிறது.

அதிகாரிகள் அவா்களால் முடிந்தவரை அவா்களது பணியைச் செய்கிறாா்கள்.

ஆனால் பொதுமக்களும், வியாபாரிகளும் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முடியும். தற்போது மளிகைக் கடை, ஜவுளிக் கடைகளில் குறிப்பிட்ட நபா்கள் மட்டும் இருக்கவேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், செங்கம் நகரில் பெரும்பாலான ஜவுளி மற்றும் மளிகைக் கடைகளில் சமூக இடைவெளி இல்லாமல் வியாபாரம் நடைபெறுகிறது. அதே நேரத்தில் காய், கனிகளை வாங்கும் இடத்திலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதில்லை.

இது போன்ற அலட்சியத்தால் செங்கம் நகரில் கரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

எனவே, செங்கம் பகுதியில் அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுத்து கடை உரிமையாளா்களை எச்சரித்து கூட்டத்தைக் கட்டுப்படுத்தி வியாபாரம் செய்தால் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தலாம் என சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com