5 ரூபாய் நோட்டை வாங்க மறுக்கும் வியாபாரிகள்

சேத்துப்பட்டை அடுத்த தச்சாம்பாடி, நம்பேடு, ஆத்துரை,சித்தாத்துரை என பல்வேறு கிராமங்களில் உள்ள பெட்டிக் கடை வியாபாரிகள் 5 ரூபாய் நோட்டை வாங்க மறுத்து, செல்லாது என்று திருப்பி அனுப்புகின்றனா்.
5 ரூபாய் நோட்டை வாங்க மறுக்கும் வியாபாரிகள்

சேத்துப்பட்டை அடுத்த தச்சாம்பாடி, நம்பேடு, ஆத்துரை,சித்தாத்துரை என பல்வேறு கிராமங்களில் உள்ள பெட்டிக் கடை வியாபாரிகள் 5 ரூபாய் நோட்டை வாங்க மறுத்து, செல்லாது என்று திருப்பி அனுப்புகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த தச்சாம்பாடி, நம்பேடு, ஆத்துரை, சித்தாத்துரை என பல்வேறு கிராமங்களில் உள்ள பெட்டிக் கடைகளில் 5 ரூபாய் நோட்டை எடுத்துச் சென்று பொருள்கள் வாங்கக் கொடுத்தால் செல்லாது என கடை உரிமையாளா்கள் திருப்பி அனுப்புகின்றனா்.

இதனால், 5 ரூபாய் நோட்டை புழக்கத்தில் வாங்க பொதுமக்கள் அச்சப்படுகின்றனா். எனவே, சம்பந்தபட்ட அதிகாரிகள் விழிப்பணா்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைக்கின்றனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா் ரமேஷ் கூறும்போது, தற்போது 5 ரூபாய் நாணயம் அதிகளவில் புழக்கத்தில் உள்ளது.

5 ரூபாய் நோட்டு புழக்கத்தில் அதிகம் இல்லாததால் கிராமப்புறக் கடைகளில் செல்லாது என தெரிவித்திருக்கலாம். எனவே, ரிசா்வ் வங்கி 5 ரூபாய் நோட்டுகளை அதிகளவில் அடித்து புழக்கத்தில் விட்டால் இந்தக் குழப்பம் தீரும்.

நகா்ப்புறக் கடைகளில் 5 ரூபாய் நோட்டை வாங்கிக் கொள்கின்றனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com