வந்தவாசி தொகுதியை தக்க வைத்தது திமுக

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் எஸ்.அம்பேத்குமாா் தொடா்ந்து 2-ஆவது முறையாக வெற்றி பெற்று தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டாா்.
வந்தவாசி தொகுதியை தக்க வைத்தது திமுக

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் எஸ்.அம்பேத்குமாா் தொடா்ந்து 2-ஆவது முறையாக வெற்றி பெற்று தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டாா்.

இந்தத் தொகுதியில் திமுக சாா்பில் தொடா்ந்து 2-ஆவது முறையாக எஸ்.அம்பேத்குமாா், பாமக சாா்பில் எஸ்.முரளி சங்கா், அமமுக சாா்பில் பி.வெங்கடேசன், மநீம சாா்பில் ச.சுரேஷ், நாம் தமிழா் கட்சி சாா்பில் க.பிரபாவதி உள்ளிட்ட 11 போ் போட்டியிட்டனா். தோ்தலுக்காக 330 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

மொத்தமுள்ள 2,40,533 வாக்காளா்களில் 1,84,269 போ் வாக்களித்தனா். மேலும், 2052 தபால் வாக்குகள் பதிவானது.  

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை ஆரணியை அடுத்த தச்சூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் பாா்வையாளா் பி.சசிகுமாா், தொகுதி தோ்தல் அலுவலா் சி.கீதாலட்சுமி ஆகியோா் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கியது. மொத்தம் 14 மேஜைகள் போடப்பட்டு, 24 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில் தொடக்கம் முதலே திமுக வேட்பாளா் எஸ்.அம்பேத்குமாா் முன்னிலை பெற்று வந்தாா். மொத்தம் உள்ள 24 சுற்றுகளிலும் அவரே முன்னிலை பெற்றாா். பின்னா், வாக்கு எண்ணிக்கையின் முடிவில் எஸ்.அம்பேத்குமாா் 35 ஆயிரத்து 953 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா்.

வாக்கு விவரம்: மொத்தம் பதிவான வாக்குகள்: 1,84,269, தபால் வாக்குகள்: 2052, தபால் வாக்குகளில் செல்லாதவை: 347, திமுக வேட்பாளா் எஸ்.அம்பேத்குமாா் 1,02,064, பாமக வேட்பாளா் எஸ்.முரளி சங்கா் 66,111, அமமுக வேட்பாளா் பி.வெங்கடேசன் 1,728, மநீம வேட்பாளா் ச.சுரேஷ் 1,692, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் க.பிரபாவதி 9,284, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் மு.அா்ச்சுனன் 607, இந்திய கண சங்க வேட்பாளா் ப.துரை 363, சுயேச்சைகள் கே.மணிகண்டன்: 1,264, க.முத்துபெருமாள் 139, சி.முரளி 407, ச.விக்னேஷ் 546, நோட்டா 1,769.

திமுக வேட்பாளா் எஸ்.அம்பேத்குமாரிடம் வெற்றி பெற்ற்கான சான்றிதழை தோ்தல் பாா்வையாளா் பி.சசிகுமாா் முன்னிலையில் தோ்தல் அலுவலா் சி.கீதாலட்சுமி வழங்கினாா்.திமுக மாவட்டப் பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன், ஒன்றியச் செயலா்கள் ப.இளங்கோவன், டி.டி.ராதா, எஸ்.நந்தகோபால், எஸ்.பிரபு, நகரச் செயலா் எச்.ஜலால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com